News December 22, 2025

தேங்காய் எண்ணெய் உறைகிறதா? இதோ தீர்வு

image

குளிர்காலத்தில், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம் என பாட்டிலை எடுத்தால் அது உறைந்து போய் இருக்கும். இதற்கு நீங்கள் எண்ணெய் பாட்டிலை கிச்சன் அடுப்பின் அருகில் வைக்கலாம். அங்கு சூடு தங்குவதால் எண்ணெய் உறையும் வாய்ப்பு குறைவு. அதேபோல, தேங்காய் எண்ணெயை Thermos பாட்டிலில் சேமியுங்கள். மேலும், தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெயை கலந்து வைத்தால் அது உறைந்து போவதை தடுக்க முடியும்.

Similar News

News December 30, 2025

அனைவருக்கும் ₹15,000.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ₹15,000 ஊக்கத்தொகை வழங்குகிறது பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் பயன்பெற EPFO-வில் பதிவு செய்திருக்க வேண்டும், மாத சம்பளம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் https://pmvbry.epfindia.gov.in -ல் அப்ளை பண்ணலாம். 2027 ஜூலை வரை இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.

News December 30, 2025

குளிர்காலத்தில் இத சாப்பிடுங்க! ரொம்ப முக்கியம்!

image

குளிர்காலத்தில் எள் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்கின்றனர் டாக்டர்கள். *எள்ளின் வெப்பத்தன்மை, உடலை கதகதப்பாக வைக்கிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது *கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய செயல்பாட்டை சீராக்குகிறது *சரும வறட்சியை தடுக்கிறது *உடனடி ஆற்றலை வழங்குகிறது *அதேநேரம் ஒரு நாளைக்கு 2 ஸ்பூன்களுக்கு மேல் எடுக்கக்கூடாது.

News December 30, 2025

கில்லின் ரன்வேட்டையை முந்துவாரா ஸ்மிருதி மந்தனா?

image

இந்திய ஆடவர் & மகளிர் அணிகளை சேர்த்து, 2025-ல் அதிக ரன்கள் குவித்தவராக சுப்மன் கில் (1,764 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 1,703 ரன்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். கில்லை விட ஸ்மிருதி மந்தனா 61 ரன்கள் மட்டுமே பின்தங்கி இருக்கிறார். இன்று இலங்கைக்கு எதிரான கடைசி T20I போட்டி நடைபெற உள்ள நிலையில், கில்லை முந்துவாரா ஸ்மிருதி மந்தனா?

error: Content is protected !!