News April 15, 2024
தொலைதூர கல்வி தேர்வு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரம் மற்றும் இணையவழி கல்வி முறையில் 2024 ஆம் ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவருக்கு தேர்வு விண்ணப்பித்தல் விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது http/https:/coe.annamalaiuniversity.ac.in/bank/examreg.php என்ற தளத்தில் இன்று முதல் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வுக்கான அட்டவணையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.14) இரவு 10 மணி முதல் இன்று (அக்.15) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 14, 2025
கடலூர்: சரவெடிகளை வெடிக்க கூடாது-ஆட்சியர் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகை நாளில் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
News October 14, 2025
கடலூர்: மாசு இல்லாத தீபாவளி; ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டுமென ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளால் மாசு ஏற்படுவதால், மாசு இல்லாமல் தீபாவளி கொண்டாட வேண்டுகோள் விடுத்தார்.