News November 9, 2024

தொடர் மழை: கடலுக்குள் செல்லாத 3,000 மீனவர்கள் 

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தொடர் மழை பெய்ததால் 3,000 மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தெற்கு வங்க கடல் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

Similar News

News December 11, 2025

நாகை: B.E படித்தவர்களுக்கு வேலை; தேர்வு இல்லை!

image

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க!
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

வங்கக் கடலில் உருவாகி நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் காற்றின் வேகம் 45 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்களும் விரைந்து கரைத்திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

News December 11, 2025

நாகை: சரக்கு வாகனம் மோதி பரிதாப பலி

image

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்தவர் அலிஷேக் மன்சூர் (60). இவர் நேற்று தனது டூவீலரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திட்டச்சேரி அடுத்த குருவாடி அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் அலிஷேக் மன்சூரின் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!