News December 1, 2025

தெளிவான முடிவை எடுத்துள்ளேன்: KAS

image

பாஜக சொல்லியே தவெகவில் இணைந்திருப்பதாக <<18435219>>உதயநிதி விமர்சித்ததற்கு<<>> செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். யார் சொல்லியும் இணையவில்லை, நானே தெளிவாக முடிவெடித்து தவெகவில் இணைந்திருக்கிறேன் எனக் குறிப்பிட்ட அவர், தனது பயணங்கள் சரியாகத்தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதாகவும் அவர் சாடியுள்ளார்.

Similar News

News December 3, 2025

உலகளவில் இமயமலைக்கு கூடும் மவுசு!

image

உலகளவில் டாப் டிரெண்டிங் டெஸ்டினேஷன் பட்டியலில் (2026) இமயமலை முதல் இடத்தை பிடித்துள்ளது. திரில், இயற்கை, கலாசாரம், ஆன்மிகம் என அனைத்தும் கலந்த இடமாக இமயமலை இருப்பதால் டிராவலர்ஸ் இங்கு வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிட்டிக்கு டூர் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, இயற்கை வளமிக்க இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு டிராவலர்ஸ் வந்திருப்பதை இது காட்டுகிறது. உங்களுக்கு இமயமலை போக ஆசையா?

News December 3, 2025

எனக்கு இதுதான் மிகப்பெரிய விருது: CM ஸ்டாலின்

image

மாற்றுத்திறனாளிகள் ஆரத்தழுவியது தனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பேசிய அவர், இந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60 அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதியாக மேலும் 9,000 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளார்.

News December 3, 2025

BREAKING: இந்தியா பேட்டிங்

image

ராய்ப்பூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது ODI-யில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பிளேயிங் XI: ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, KL ராகுல், ருதுராஜ், ஜடேஜா, சுந்தர், குல்தீப், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா. முதல் போட்டியை போலவே 2-வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

error: Content is protected !!