News June 8, 2024
தெலுங்கு மாநிலங்களின் அரசியலை தீர்மானித்த ஆர்.ஆர்

தெலுங்கு தேச அரசியலின் பிதாமகன் என்.டி.ஆரில் தொடங்கி YSR ஜெகன் வரை 4 நான்கு தலைமுறை தேர்தல் அரசியலை தீர்மானித்த அதிகாரமிக்க
ஆளுமையாக திகழ்ந்தவர் ராமோஜி ராவ். தனக்கு தவறென தோன்றுவதை யாராக இருந்தாலும் துணிந்து சொல்லும் நேர்மை கொண்டவர். ஈ டிவி ஊடகம் என்பதைக் கடந்து, இரு தெலுங்கு மாநில மக்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலித்ததோடு, விமர்சன ரீதியிலான அரசியல் கருத்துருவாக்கத்தையும் விதைத்தது.
Similar News
News September 24, 2025
ஏழுமலையான் தரிசனத்திற்கு இதுதான் சரியான நேரம்!

திருப்பதியில் கடந்த வாரம் பக்தர்களின் கூட்டம் அலைமோதி, தரிசனத்திற்கு 12- 14 மணி – நேரம் வரை ஆன நிலையில், தற்போது கூட்டம் குறைந்துள்ளது. புரட்டாசி மாத பிரம்மோற்சவ சேவை இன்று தொடங்கும் நிலையில், கூட்டம் குறைந்துள்ளது. இதனால், இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் காத்திருக்காமல் நேரடியாக அனுமதிக்கப்படுகின்றனர். பிரம்மோற்சவ சேவை தொடங்குவதால், பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 24, 2025
மூலிகை: நந்தியாவட்டையில் இவ்வளவு நன்மைகளா..

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி ➣நந்தியாவட்டை பூக்களை தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால், கண் பிரச்னைகள் நீங்கும் ➣இலைகளின் சாறு காயத்தின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும் ➣நந்தியாவட்டையின் வேர் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் ➣கல்லீரல் & மண்ணீரல் வியாதிகளுக்கு நந்தியாவட்டையின் வேர் தோல் மிகுந்த பயன்களை அளிக்கக் கூடியது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 24, 2025
நாடு முழுவதும் எதிரொலித்த விலை குறைப்பு

GST வரி குறைப்பு எதிரொலியாக நாடு முழுவதும் செப்.22ம் தேதி ஒரே நாளில் மாருதி சுசுகி 32,000 கார்களையும், ஹூண்டாய் 12,000 கார்களையும், டாடா நிறுவனம் 11,000 கார்களையும் விற்பனை செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தியாவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி நெருங்குவதால், இன்னும் பைக், கார்களின் விற்பனை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.