News April 12, 2025

தெலுங்கானாவில் இருந்து 2,650 டன் அரிசி நாகர்கோவில் வருகை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்து அரிசி வந்து கொண்டிருக்கிறது. இன்று தெலுங்கானாவில் இருந்து 2,650 டன் அரிசி இன்று சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து அவை லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு பள்ளி விளையில் உள்ள மத்திய சேமிப்பு கிட்டங்கிக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கப்பட்டது.

Similar News

News April 13, 2025

குமரி : பைக் திருடிய 2 பேர் கைது

image

குழித்துறை பகுதியில் பைஜு என்பவரின் உயர்ரக  பைக் திருட்டு போனது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராகுல் சந்திரன் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் பைக்கை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை மார்த்தாண்டம் போலீசார்  கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

News April 12, 2025

குமரி: திருமலை திருப்பதி கோயிலில் 7000 லட்டுகள் ரெடி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் சித்திரை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு வழக்கம்போல் 7000 லட்டுகள் விற்பனைக்கு உள்ளது எனவும் அன்று மதியம் அன்னதானமும் நடைபெறும் என நிர்வாகித்தனர் தெரிவித்தனர். சுப நிகழ்ச்சிகளுக்கு கோயில் மண்டபம் குறைந்த வாடகைக்கு கொடுக்கப்படும் என்று பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். *ஷேர் 

News April 12, 2025

திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் 5 நாட்கள் ஆய்வு – ஆட்சியர்

image

அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை M/S ரைட்ஸ் நிறுவனம் (மத்திய பொதுத்துறை நிறுவனம்) அண்ணா பல்கலைக்கழகம், தூத்துக்குடி ஆகிய நிறுவனங்கள் 15.04.2025 முதல் 19.04.2025 வரை ஐந்து நாட்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!