News July 16, 2024
தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், இரவு 07.30 மணிக்கு புறப்படும்; சேலம் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.07 மணிக்கு வர வேண்டிய ரயில், நள்ளிரவு 11.53 மணிக்கே வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
சேலத்தில் நாய்க்கடிக்கு உயிர் பலி; இதை பண்ணுங்க!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் ரேபிஸ் தொற்று தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தெரு நாய்கள் தொந்தரவு அல்லது நாய்க்கடி போன்ற பிரச்சனைகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து உதவுங்கள்.
News August 21, 2025
சேலம்: ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு!

“சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது”- மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவிப்பு.
News August 21, 2025
ஆக.22, 26-ல் சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்!

தண்டவாள புதுப்பித்தல் பணிகள் காரணமாக, ஆக.22, 26-ல் கண்ணூர்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு முதல் கோவை வரை இயக்கப்படாது. கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும். போத்தனூர்- மேட்டுப்பாளையம் ரயில் கோவையில் இருந்து புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.