News November 3, 2025
தெரு நாய்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் CS நேரில் ஆஜர்!

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் அரசு தலைமைச் செயலர்கள் கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று SC அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் இன்று(நவ.3) ஆஜரானார். தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நெறிமுறைகளை வகுப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள்

அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன. அணு ஆயுதங்களை, சில நாடுகள் அதிகாரப்பூர்வமாகவும், சில நாடுகள் மறைமுகமாகவும் வைத்திருக்கின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அறிவித்த நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News November 3, 2025
கோவை சம்பவத்தை கண்டு நெஞ்சம் பதறுகிறது: விஜய்

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதை கண்டு நெஞ்சம் பதறுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை., மாணவிக்கு நடந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை, அதற்குள் இப்படி ஒரு கொடுமையா எனவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கோவை குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News November 3, 2025
நவம்பரில் ரீ-ரிலீஸ் படங்கள்

சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ரீ‑ரிலீஸ் என்பது புதிய டிரெண்டாக மாறி வருகிறது. நடிகர்களின் பிறந்தநாள் அல்லது திரைப்படம் வெளியான அதே நாள் என ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. இந்த நவம்பர் சில சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இதில், நீங்க எந்த படம் பாக்க போறீங்க, கமெண்ட்ல சொல்லுங்க.


