News August 25, 2025
தெரு நாய்களை பிடிக்கும் பணி துவக்கம்

திண்டிவனம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அதிக அளவில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் சுற்றி வருவது பொது மக்கள் மத்தியில் அச்சுறுத்துலை ஏற்படுத்தி வந்தது.இதை தொடர்ந்து நகராட்சி சார்பில் அதே பகுதியில் தனியார் ஆட்கள் மூலம் தெரு நாய்களை வலைபோட்டு பிடிக்கும் நடவடிக்கை,சுகாதார அதிகாரி செந்தில் மேற்பார்வையில் நடந்தது. நேற்று மட்டும் 25 நாய்கள் பிடிக்கப்பட்டதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News August 25, 2025
ரூ.5 கோடி கடன் உதவி;தொழில் முனைவோருக்கு அழைப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ஆர்வமுள்ளவர்களுக்கு ₹5 கோடி கடன் உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்தக் கடன் தொகைக்கு அரசு மானியமும் உண்டு. இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
“விழுப்புரம் சிறுதானிய சாகுபடி 1,506 எக்டர் குறைவு.”

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை குறைவால் மானாவாரி பயிர் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 1,506 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, தினை ஆகியவற்றின் சாகுபடி குறைந்துள்ளது. நெல் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி அதிகரித்திருந்தாலும், போதிய மழையின்மை விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
News August 25, 2025
பொதுக்கணக்கு குழு ஆய்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக சட்டசபை பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை நேற்று(ஆக.24) நடைபெற்றது. இத்த கூட்டத்திற்கு, ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் நாளை தமிழக சட்டசபை பேரவை பொது கணக்கு குழு ஆய்வு மேற்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், டி.ஆர்.ஓ. அரிதாஸ் பங்கேற்றார்.