News November 7, 2025
தெருநாய்கள் வழக்கு: SC-ன் உத்தரவுகள் இதோ! 2/2

தெருநாய்கள் வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. *பள்ளி, கல்லூரிகள், ஹாஸ்பிடல் பகுதிகளுக்குள் தெருநாய்கள் நுழைவதை தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் *அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன பகுதிகளுக்குள்ளும் நாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் *மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை *இதை ஒரு அதிகாரியை நியமித்து கண்காணிக்க உத்தரவு.
Similar News
News February 13, 2026
மேலும் ₹500 உயர்வு.. ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இத்தொகை ₹1,500 ஆக உயர்த்தப்படும் என சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒருகால பூஜை நடத்தும் அர்ச்சகர்களுக்கு ₹1,500 வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்திற்கு ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
News February 13, 2026
எப்படி இருக்கிறது சசிகுமாரின் ‘மை லார்ட்’ Full Review & Rating

உயிருடன் இருக்கும் போதே, சசிகுமாரும் அவரது மனைவியும் இறந்துவிட்டதாக அரசு தரவுகளில் கூற, அதை எப்படி சசிகுமார் எதிர்த்து போராடுகிறார் என்பதே ‘மை லார்ட்’ படத்தின் கதை *பிளஸ்: சசிகுமாரும், சைத்ராவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ராஜூமுருகனின் திரைக்கதை பல இடங்களில் கைதட்ட வைக்கிறது. இசை, ஒளிப்பதிவு சூப்பர். கிளைமாக்ஸ் நன்றாக உள்ளது *பல்ப்ஸ்: 2-ம் பாதி கொஞ்சம் தடுமாறுகிறது. Rating: 2.25/5.
News February 13, 2026
திமுக, அதிமுகவுக்கு விஜய் Open சவால்

மற்றவர்கள் தொடங்கிய கட்சியில் இருப்பவர்கள், தன்னை போல் தனியாக நின்று 1% வாக்கு வாங்க முடியுமா என விஜய் சவால்விட்டிருக்கிறார். தன்னை அனுபவமில்லாதவர் என கூறுவதற்கு பதிலடிகொடுத்த அவர், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் தங்களுக்கு அனுபவமில்லை என்றார். மேலும், கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதன்மையான சக்தியாக மாறி, 30%-க்கு மேல் மக்கள் ஆதரவை கொண்டிருக்கும் தவெகவுக்கு அனுபவமில்லையா எனவும் கேட்டுள்ளார்.


