News March 20, 2025

தெரியாத எண்களில் இருந்து வீடியோ அழைப்புகள் – எச்சரிக்கை

image

காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் பொதுமக்களின் நலன் கருதி திருச்சி மாவட்ட காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை எடுக்க வேண்டாம். உங்கள் வீடியோ உரையாடலை பதிவு செய்து உங்களிடம் பணம் கேட்டு மிரட்டலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சைபர் குற்ற புகார்கள் தெரிவிக்க 1930ஐ அழைக்கவும். SHARE பண்ணுங்க..

Similar News

News April 10, 2025

திருச்சி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள் …

image

திருச்சி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031, 2415032, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, விபத்து அவசர வாகன உதவி – 102, பேரிடர் கால உதவி – 1077, விபத்து உதவி எண் – 108. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்!

News April 10, 2025

திருச்சி வழியாக விடுமுறை கால ரயில் சேவை அறிவிப்பு

image

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை தாம்பரம் – போத்தனூர் வாராந்திர சிறப்பு ரயில் திருச்சி வழியாக ஏப்ரல்-11, 18, 25 மற்றும் மே-2 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை போத்தனூர் சென்றடையும். இந்தக் கோடை விடுமுறை சிறப்பு ரயிலை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திருச்சி தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

பெண் எஸ்.எஸ்.ஐ இடம் மாற்ற வாக்கி டாக்கியில் உத்தரவு

image

அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றிய சுமதி, கற்பழிப்பு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி, புகாரை ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் டி.ஐ.ஜி. வருண்குமார் கவனத்திற்கு சென்றதால், அவர் வாக்கி டாக்கி மூலம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி, வாக்கி டாக்கியில் எஸ்.எஸ்.ஐ சுமதி-யை இடம் மாற்ற செய்ய உத்தரவிட்டார்.

error: Content is protected !!