News April 26, 2024

தெப்பத் திருவிழா – ஆய்வு செய்த எஸ். பி

image

மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியை நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, மக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது மன்னார்குடி டி எஸ் பி உடனிருந்தார்.

Similar News

News August 22, 2025

திருவாரூர்: இனி ஈஸியா சிலிண்டர் புக் பண்ணலாம்!

image

கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

திருவாரூர்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

image

வலங்கைமான், இனாம்கிளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43) விவசாய தொழிலாளி, சம்பவத்தன்று இவரது வீட்டில் மின் விளக்குகள் எரியவில்லை என தெரிகிறது. இதனால் ரமேஷ், வீட்டின் மின் இணைப்பை நிறுத்தாமல் பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரமேசை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

News August 22, 2025

கூட்டுறவு துறை வேலை வாய்ப்புக்கு இவலச பயிற்சி

image

திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு கூட்டுறவு துறையால் அறிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.1ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!