News January 11, 2025
தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயிலில், முன்பதிவு டிக்கெட் தொடங்கி ஒரு சில நிமிடத்திலேயே முடிவடைவதால் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அதிலும் சிலர் தங்களது சொந்த வாகனத்திலேயே விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
Similar News
News February 18, 2026
சென்னை: குளியளறையில் ஆடைகளின்றி பெண் சடலம்!

சென்னை: தி.மலையைச் சேர்ந்தவர் ரோஜா (35) வழக்கறிஞரான இவர், நேற்று(பிப்.16) முன்தினம் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நண்பர் யஷ்வந்த் குமாருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். பின் இருவரும் மது அருந்தியுள்ளனர். அன்றைய தினம், ஹோட்டலில் இருந்து வெளியே சென்ற யஷ்வந்த, திரும்பி வந்த போது, குளிக்கும் தொட்டியில் ஆடைகளின்றி ரோஜா இறந்து கிடந்தார். விசாரணையில், இது விபத்தாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
News February 18, 2026
முடிவுக்கு வந்த 17 ஆண்டு கால காத்திருப்பு!

வேளச்சேரி – பரங்கிமலை 5 கி.மீ தூரத்தை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தடதிட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 17ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிகட்ட சோதனை அடுத்த மாதம் நடைபெறும் எனவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.