News February 4, 2026

தென் மண்டலத்தில் கனிமொழி நடத்தும் ஸ்பெஷல் சர்வே

image

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியை உள்ளடக்கிய தென்மண்டலத்தின் திமுக தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி உள்ளார். இந்த மாவட்டங்களில் யாரை நிறுத்தினால் சிரமப்படாமல் ஜெயிக்க முடியும் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் சர்வே டீமை களத்தில் இறக்கி இருக்கிறாராம் கனிமொழி. தென்மாவட்டங்களிலுள்ள 22 தொகுதிகளிலும் பல கோணங்களில் சர்வே நடப்பதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனராம்.

Similar News

News February 10, 2026

எதிர்கட்சி யார் என்பதில்தான் விஜய் போட்டி: கடம்பூர் ராஜு

image

தவெக வெறும் கானல் நீர் தான் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். வெயில் காலம் தொடங்கி​விட்​டதாக கூறிய அவர், இச்​சம​யத்​தில் தென்​படும் கானல் நீர் சில நிமிடங்​களில் காணாமல் போய் ​விடும் எனவும் பேசியுள்ளார். மேலும், விஜய் ‘தவெகவுக்கும், திமுக​வுக்​கும் தான் போட்​டி’ என்று கூறு​வது, அவர்​களில் யார் எதிர்க்கட்​சி​யாக வரப்​போகின்​றனர் என்​ப​தற்கான போட்டியாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

News February 10, 2026

கேசவ விநாயகத்தின் பொறுப்பில் பிரஷோப குமார்?

image

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகளாக அப்பொறுப்பிலிருந்த கேசவ விநாயகம் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டார். அதன் <<19095269>>பின்னணியில் அண்ணாமலை<<>> கூறிய பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக பேச்சு எழுந்தது. இந்த நிலையில், RSS-ன் வட தமிழக அமைப்பாளராக இருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த பிரஷோப குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

News February 10, 2026

FLASH: லிபியாவில் படகு கவிழ்ந்து 53 அகதிகள் பலி!

image

ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் பயணித்த ரப்பர் படகு லிபியா கடற்பரப்பில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 53 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத படகில் பலர் பயணித்ததே விபத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவுக்கு செல்ல அகதிகள் பயன்படுத்தும் இந்த வழித்தடத்தில், 2026-ல் மட்டும் கிட்டதட்ட 500 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!