News August 31, 2024

தென் கடலில் படகுகள் தொழிலுக்கு செல்ல தடை

image

நாளை (செப்.01.) கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ வரையிலும் அதிகபட்சமாக 65 கிமீ வரையிலும் வீச கூடும். இதனால் கடல் அலை 2. 3 முதல் 2.5 மீட்டர் உயரம் எழக் கூடும். இதனால் மண்டபம் தென் கடல் பகுதியில் விசைப்படகு, நாட்டுப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது என மண்டபம்
மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 7, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்து செல்லும் காவல்துறை விவரம்

image

ராமநாதபுரம், இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை அறிவித்துள்ளது.

News September 6, 2025

ராமேஸ்வரம் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் – திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் – மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் – திருச்சி சோழன் (22675), எழும்பூர் – ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் – ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.

News September 6, 2025

ராம்நாடு: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

ராமநாதபுரம் மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் அடைய வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!