News July 5, 2024
தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 30 கொண்ட 9 குழுக்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்து உள்ளனர். இந்த குழுவில் 6 பெண் வீராங்கனைகள் கேரளாவில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழா, இடுக்கி மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டத்திற்கு மீட்பு பணிக்காக செல்ல அரக்கோணத்தில் பேரிடர் மீட்புப் படைவீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: பொதுமக்களுக்கு GOOD NEWS!

ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில், கடந்த சில மாதங்களாக அந்த இடத்தில் கால அட்டவணை பலகை இல்லாமல் இருந்தது. இதனால் பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (நவ.7) பஸ் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகையை அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
News November 9, 2025
ராணிப்பேட்டை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்.!

ராணிப்பேட்டை, ரெட்டிவலம் அருகே நேற்று முன்தினம் (நவ. 7) அரக்கோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து, கண்டக்டர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், பேருந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
News November 9, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


