News February 6, 2025
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன் (35). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராமல் மரத்திலிருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்த மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
கடலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News November 11, 2025
கடலூர்: வயிற்று வலியால் விபரீத முடிவு

திட்டக்குடி அடுத்த கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (45). டிரைவரான இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் கொட்டாரம் அருகே உள்ள ரைஸ் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 11, 2025
கடலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

கடலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


