News December 15, 2025

தென்னை மரங்களுக்குக் காப்பீடு – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கையில் சுமார் 9127 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பயன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இந்த இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் தங்களுடைய தென்னை மரங்களுக்குக் காப்பீடு செய்து பயன் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு வட்டாரத் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News

News December 19, 2025

சிவகங்கை: பஸ் கண்டக்டருக்கு ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு

image

பரமக்குடியை சேர்ந்தவர் அரசு டவுன்பஸ் கண்டக்டர் மயில்பாண்டியன் 28. நேற்று மானாமதுரையில் இருந்து பரமக்குடி சென்ற டவுன் பஸ்ஸில் பணியில் இருந்தார். நேற்று இரவு 7:30 மணியளவில் இளையாங்குடி பகுதி விஜயன்குடி ரைஸ்மில் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டூவீலர்களில் வந்த 3 பேர் பஸ்சை நிறுத்தி மயில்பாண்டியை ஒடஒட அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை GH-ல் சிகிச்சை பெறுகிறார்.

News December 19, 2025

சிவகங்கை – காரைக்குடியில் மின்தடை அறிவிப்பு

image

சிவகங்கை மற்றும் காரைக்குடி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (டிச.20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, காரைக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை இருக்கும் என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்தடை இடங்கள் பற்றி முழுதாக அறிய <>இங்கு கிளிக்<<>> செய்யவும். SHARE

News December 18, 2025

சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04575240388) அணுகலாம். SHARE பண்ணுங்க…

error: Content is protected !!