News February 25, 2026

தென்னக ரயில்வே மீது கோபத்தில் கனிமொழி

image

சென்னை புறநகர் பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனையளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த சில நாள்களாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருவது நாள்தோறும் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மெத்தனம் காட்டாமல் இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 1, 2026

FLASH: சிலிண்டர் விலை உயர்ந்தது

image

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல், ₹29.50 உயர்ந்து ₹1,929 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ₹868.50 ஆக தொடர்கிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News March 1, 2026

மார்ச் 1: வரலாற்றில் இன்று

image

*பாகுபாடு ஒழிப்பு நாள் *1904–பத்திரிகையாளர் ஆ.நா.சிவராமன் பிறந்தநாள் *1910–தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் *1951–பிஹார் CM நிதிஷ் குமார் பிறந்தநாள் *1953–CM ஸ்டாலின் பிறந்தநாள் *1992–பாடகி சூலமங்கலம் ராஜலட்சுமி நினைவு நாள் *1992-விடுதலை போராட்ட வீராங்கனை கே.பி.ஜானகி அம்மாள் நினைவு நாள் *1995–Yahoo ஆரம்பம் *2014-அரசியல்வாதி பங்காரு லட்சுமண் நினைவு நாள்

News March 1, 2026

திமுகவின் பிரசாரத்தை முறியடிக்க பாஜகவின் திட்டம்

image

தேர்தலையொட்டி தமிழகத்திற்கு அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TN-ஐ மத்திய அரசு வஞ்சிப்பதாக CM ஸ்டாலின் கூறும் நிலையில், 3 மாவட்டங்களுக்கு தலா ஒரு அமைச்சர் வீதம் அனுப்பி PM வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை குறித்து பயனாளிகளிடம் எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு நல்ல பெயர் உண்டாகி, அது வாக்காக மாறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!