News June 25, 2024
தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதவியேற்றார்

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு, தமிழச்சி தங்கப்பாண்டியன் 2வது முறையாக எம்.பி-யாக பதவியேற்றுள்ளார்.
Similar News
News October 31, 2025
சென்னை ஐ.ஐ.டி அசத்தல்

விமானத் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்காக மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் விமானம், வான்வழி வாகனத்தின் செங்குத்து புறப்பாடு – தரையிறக்கத்துக்கான ஹைப்ரிட் ராக்கெட் உந்துவிசையை உருவாக்குவதில் சென்னை ஐ.ஐ.டி. முன்னேற்றம் கண்டுள்ளது. செங்குத்தாக புறப்படச் செய்வது, தரையிறங்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.
News October 31, 2025
சென்னை: ரயில்வேயில் 5,810 பணியிடங்கள்- APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 31, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (அக்.31) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8th, SSLC, +2, டிகிரி முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.


