News September 4, 2024
தென்காசி: 8 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

தென்காசி மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் கலைச் செல்வி, சண்முக சுந்தரம், ராஜா சிங், கணேசன் ஆகிய நான்கு பேரும், தொடக்க கல்வித் துறையில் மீனாட்சி, ஆக்னஸ் மேரி, ஹெலன் மேரி கிரிஸ்டிபாய், பரமேஸ்வரி ஆகிய நான்கு பேரும் நாளை சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது வாங்கவுள்ளனர்.
Similar News
News October 5, 2025
தென்காசியில் ஒருவர் தற்கொலை

தென்காசியை அடுத்த ஆய்க்குடி செல்லும் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில், உடையாம்புளியைச் சேர்ந்த 48 வயது பாக்கியமுத்து, தென்னை மருந்தின் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி பிரிந்து சென்றதாலும், மதுப்பழக்கத்தாலும் ஏற்பட்ட விரக்தியே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது.
News October 5, 2025
தென்காசியில் துப்பாக்கியை ஒப்படைக்க கெடு!

தென்காசியில் அனுமதி இல்லாத துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தாமாக முன் வந்து துப்பாக்கியை ஒப்படைக்க நவ.30 தேதி வரை கால கெடு. மேலும் tenkasidfo@gmail.com என்ற இணையதள முகவரியிலும், மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்-04633233550, சிவகிரி- 04636298523, புளியங்குடி-04636235853, கடையநல்லூர் -04633210700, குற்றாலம்-04633298190, தென்காசி -0463323366 தொடர்பு கொள்ளலாம்.
News October 5, 2025
அக்டோபரில் மாற்றுப்பாதையில் இயங்கும் முக்கிய ரயில்கள்

மதுரை கோட்ட ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 16848 (செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்): அக்டோபர் 4 முதல் 31ம் தேதி வரை, (அக். 8, 15, 19, 20, 21, 29 ஆகிய தேதிகளைத் தவிர) மற்ற நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். ரயில் எண் 16847 (மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்): அக்டோபர் 4 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.