News March 12, 2025

தென்காசி: 4 மொழிகளில் இசையமைத்த இசையமைப்பாளர்

image

தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் பரத்வாஜ். முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். தமிழில் காதல் மன்னன், ஜேஜே ,ஜெமினி, அட்டகாசம் என பல படங்களுக்கும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் இசையமைத்துள்ளார். 2008-ம் ஆண்டில் கலைமாமணி விருது, 2 முறை பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார். அஜித்க்கு காதல் மன்னன் பெயரை பெற்று தந்த படத்திருக்கும் இசை அமைத்தவரும் இவரே. *ஷேர் செய்யவும்*

Similar News

News September 12, 2025

தென்காசி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. வரும் 19ஆம் தேதி சுரண்டை நகராட்சி ,புதூர் பேரூராட்சி, மந்தியூர் ஊராட்சி, புதுக்குடி ஊராட்சி , குருக்கள்பட்டி ஊராட்சி, சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெறும் எனவும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறும்படியும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 12, 2025

தென்காசி: வீடுதேடி குடிமைப் பொருள்கள் வழங்கல்

image

தென்காசி மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரா்களுக்கு செப்.13, 14 ம் தேதிகளில் வீடுதேடி குடிமை பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் நரசிம்மன் அறிவித்துள்ளாா். இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டப் பயனாளிகளுக்கு இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யபட உள்ளது.

News September 12, 2025

செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று இங்கு மட்டும் இயக்கம்

image

செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் – கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஈரோடு – கரூர் இடையே பொறியியல் பணிகள் காரணமாக இந்த ரயில் பகுதி தூரம் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் ரோட்டில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை- திண்டுக்கல் இடையே (செவ்வாய் தவிர) ஏற்கனவே ரத்து செய்யபட்டுள்ளது.

error: Content is protected !!