News October 31, 2025

தென்காசி: 12th முடித்தால் கிராமப்புற வங்கி வேலை உறுதி!

image

தென்காசி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE IT.

Similar News

News October 31, 2025

தென்காசி: 22 நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது

image

செங்கோட்டை, கடையம், தென்காசி கடையநல்லூர் வட்டாரங்களில் கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள இடங்களில் விவசாயிகள் பயன்பெற வேண்டி 22 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ஒப்புதல் பெறப்பட்டு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக இன்று நடந்த விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News October 31, 2025

தென்காசி: வேளாண்மை இடுபொருட்கள் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஒத்திசைவு சாகுபடி செய்யப்பட்ட நெல் 8836 ஹெக்டர், சிறுதானியங்கள் – 4484 ஹெக்டர். பயறு வகைகள் 530 ஹெக்டேர் பருத்தி 602 கரும்பு 882 ஹெக்டர். எண்ணெய் வித்து 1044 ஹெக்டேர், பழங்கள் 10320 ஹெக்டேர், காய்கறிகள் – 2817 ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் 655 ஹெக்டேர். மலைப்பயிர்கள் -14337 ஹெக்டேர். பூக்கள் -489 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.

News October 31, 2025

சிலம்பு அதிவிரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

செங்கோட்டை – தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண் : 20681-20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி, 2 ஏசி மூன்றடுக்கு பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் கூடுதல் ஒரு பெட்டிகள் நவம்பர் – 1 முதல் ஏப்ரல் வரை செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!