News September 29, 2025
தென்காசி: ஹோட்டல்களில் தரமற்ற உணவுகள்

தென்காசி மாவட்டத்தில் விதிகளை மீறிய ஹோட்டல்கள் கடைகளிலும் இருந்து 10.49 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் 99 உணவகங்கள் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகள் தரமற்ற உணவு பொருட்கள் வழங்கிய கடைகள் ஆகியவற்றிற்கு உணவுத்துறை அதிகாரிகள் மூலம் 10 புள்ளி 49 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டது.
Similar News
News December 11, 2025
தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்

ஏகே 47, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மீது வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த விசாரணைக்குறித்து இன்று தென்காசி நகராட்சிக்குட்பட்ட ஆயிரப்பேரி செல்லும் சாலையில் உள்ள நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜரானார். எனவே நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
News December 11, 2025
தென்காசியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தென்காசி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
தென்காசி மாவட்டத்தில் 2,274 வீடுகள் ஒதுக்கீடு

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25, 2025-26 நிதி ஆண்டுகளில் ஆலங்குளம் 739, கடையம் 192, கடையநல்லூர் 161, கீழப்பாவூர் 209, குருவிகுளம் 216, மேலநீலிதநல்லூர் 209, சங்கரன்கோவில் 170, வாசுதேவநல்லூர் 147, தென்காசி ஒன்றியத்தில் 121, செங்கோட்டை 110 வீடுகள் என மொத்தம் ரூ.70.49 கோடியில் 2,274 வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


