News October 11, 2025

தென்காசி: வேலை நாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக் 17ம் தேதி காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. 8th, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும்.

Similar News

News October 11, 2025

தென்காசி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

image

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய அளவு மழையின் தாக்கம் இல்லாததினால் காரணமாக அருவியின் நகரம் என போற்றப்படும் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் அருவியில் நீர்வரத்து குறைந்து வருவதால் விடுமுறை தினமான சனிக்கிழமை குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

News October 11, 2025

தென்காசி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

image

தென்காசி, 21வது வார்டு ரேஷன் கடையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், அளவு குறைவில்லாமல் கிடைக்க வேண்டும். மேலும் வேலை நாட்கள் முழுவதும் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திடீரென அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

News October 11, 2025

தென்காசியில் கூட்டுறவு உதவியாளர்கள் பணிக்கான தேர்வு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடத்திற்கான தேர்வு தென்காசி தனியார் பள்ளியில் இன்று (அக்11) எழுத்துத் தேர்வு நடைபெற்றது.  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் பார்வையிட்டார். தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் துணைப்பதிவாளர்கள் கனகசுந்தரி, நரசிம்மன், கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!