News April 14, 2025

தென்காசி: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*

Similar News

News February 11, 2026

தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 11, 2026

தென்காசி: போலி பத்திரப்பதிவு செய்த விசிக நிர்வாகி கைது

image

தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக ரீகன் குமார் என்பவர் உள்ளார். இவர் பேச்சியம்மாள் (ம) பிரியங்கா என்ற 2 பெண்களுடன் இணைந்து தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அரசு நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி SP மாதவனிடம் புகார் கொடுத்த நிலையில் குமார் போலீசார் கைது செய்தனர்.

News February 11, 2026

தென்காசி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் செய்து <<>>அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!