News October 31, 2025
தென்காசி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் -படியும். தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலர் (பொதுத் தேர்தல்) சென்னை, அறிவுரையின்படியும் தென்காசி மாவட்டத்தில் 01.01.2026-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 04.11.2025 முதல் 4.12.2025 வரை ஒரு மாத காலம் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
Similar News
News October 31, 2025
தென்காசி: 22 நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது

செங்கோட்டை, கடையம், தென்காசி கடையநல்லூர் வட்டாரங்களில் கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள இடங்களில் விவசாயிகள் பயன்பெற வேண்டி 22 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ஒப்புதல் பெறப்பட்டு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக இன்று நடந்த விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
News October 31, 2025
தென்காசி: வேளாண்மை இடுபொருட்கள் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஒத்திசைவு சாகுபடி செய்யப்பட்ட நெல் 8836 ஹெக்டர், சிறுதானியங்கள் – 4484 ஹெக்டர். பயறு வகைகள் 530 ஹெக்டேர் பருத்தி 602 கரும்பு 882 ஹெக்டர். எண்ணெய் வித்து 1044 ஹெக்டேர், பழங்கள் 10320 ஹெக்டேர், காய்கறிகள் – 2817 ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் 655 ஹெக்டேர். மலைப்பயிர்கள் -14337 ஹெக்டேர். பூக்கள் -489 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.
News October 31, 2025
சிலம்பு அதிவிரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

செங்கோட்டை – தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண் : 20681-20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி, 2 ஏசி மூன்றடுக்கு பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் கூடுதல் ஒரு பெட்டிகள் நவம்பர் – 1 முதல் ஏப்ரல் வரை செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க


