News December 25, 2025
தென்காசி: வனவிலங்கு வேட்டைக்கு முயற்சி; இருவர் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருக்காலன்குளம் மற்றும் மேசியாபுரம் பகுதிகளைச் சேர்ந்த காசிப்பாண்டியன் மற்றும் முருகராஜ் ஆகியோர், வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தங்கள் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆலங்குளம் வனத் துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோத மின்வேலி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இருவரையும் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 27, 2025
தென்காசி: 10th பாஸ்; ரயில்வே வேலை!

தென்காசி மக்களே; இந்திய ரயில்வே குரூப் ‘டி’ (நிலை–1) பணிக்கு 22,000 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ/தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் தகுதியுள்ள 18 -33 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க 21.01.2026 முதல் 20.02.2026 வரை கால அவகாசம் உள்ளது. மேலும் தகவலுக்கு <
News December 27, 2025
தென்காசி: மின்தடை செய்யப்படும் பகுதிகள்

சங்கரன்கோவில் பகுதிகளான மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் (டிச.29)
காலை 9 – மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும். *ஷேர்
News December 27, 2025
தென்காசியில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி

தென்காசி மாவட்டத்தில் இன்று (27.12.2025) காலை 06.30 மணி அளவில் நீர் நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை, மாரநேரி குளம்.(குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தகவல்.


