News October 22, 2025

தென்காசி: ரூ 4ஆயிரம் வசூலித்து பயணிகளை ஏமாற்றிய பஸ்

image

தென்காசியில் இருந்து தீபாவளி முடிந்து எஸ்பிஎஸ் பஸ் மூலம் சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்து பயணிகளிடம் விதிமுறையை மீறி ரூ 4000 வரை ஆன்லைனில் பெற்று கொண்டு அந்த பயணிகளை தென்காசியில் வைத்து ஏற்றாமல் சென்று விட்டது. இதில் ஏமாந்த பயணிகள் அதே கம்பெனியை சேர்ந்த கோயம்புத்தூர் செல்லும் வேறு ஒரு பஸ்ஸை பயணிகள் மறித்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Similar News

News October 22, 2025

BREAKING: ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சிறப்பு பேரூராட்சி தலைவராக சுதா மோகன்லால் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் வீட்டு வரி செலுத்தாத காரணத்தினால் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஆலங்குளம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News October 22, 2025

தென்காசி: EB பில் நினைத்து கவலையா??

image

தென்காசி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

News October 22, 2025

தென்காசி: மதுபோதையில் காவலர் தகராறு

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையத்தில் காவலர் ஏட்டாக பணிபுரியும் பிரிட்டோ (40), தீபாவளியன்று மது அருந்திவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். மருதம்பத்தூரில் பிரகலாதன் வீட்டிற்கு பிரிட்டோ சென்று தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் ஏட்டு பிரிட்டோ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

error: Content is protected !!