News March 20, 2024
தென்காசி: ரூ.1.48 லட்சம் பறிமுதல்

தென்காசி மத்தளம் பாறை சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் தலைமையில் இன்று நடைபெற்ற வாகன தணிக்கையின் போது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற காரை மறித்து நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.48 லட்சம் பிடிப்பட்டது. பிடிபட்ட பணத்தை வட்டாட்சியர் முத்துவிடம் பறக்கும் படை குழுவினர் ஒப்படைத்தனர்.
Similar News
News September 10, 2025
தென்காசியில் நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி

தென்காசி மாவட்டத்தில் முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என இப்பள்ளி தோ்வு செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியா் கமல் கிஷோா் விருது மற்றும் சான்றிதழை வழங்கினாா். செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜவஹா்லால் பெற்றுக் கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி ஆகியோர் கலந்துகொண்டனா்.
News September 10, 2025
தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்

தென்காசி மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்க உள்ள நிலையம் நேற்று மாலை சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை 7 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் ராமநதி அணைப்பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவானது. சிவகிரியில் 10 மில்லி மீட்டர், சங்கரன்கோவில் 8.50 மில்லி மீட்டர் மழை பெய்தது. கருப்பா நிதி அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டர் செங்கோட்டையில் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
News September 10, 2025
தென்காசி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையா?

தென்காசி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக தொலைபேசி எண். 04633- 295891 மற்றும் 8148230265 என்ற தொலைபேசி எண்களிலும், சுகாதாரம் தொடர்பான குறைகளை 9600212764 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். *ஷேர்