News January 9, 2026
தென்காசி: ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு..

தென்காசி, பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 1வது நடைமேடையில் நடந்து சென்ற பாவூர்சத்திரம் தெற்கு காந்தி நகரை சேர்ந்த ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்கச் முறுக்கு செயினை பறித்து சென்றனர். செயினைப் பறித்து தலைமறைவாக இருந்த பாவூர்சத்திரம் சின்னத்தம்பி நாடார்பட்டியை சேர்ந்த சிவா என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 25, 2026
தென்காசி: GH-ல் இவை இலவசம்! இதை தெரிஞ்சுக்கோங்க..

தென்காசி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04636-222312 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News January 25, 2026
தென்காசி: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM!

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News January 25, 2026
தென்காசி: கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சுடலைமுத்து (55). இவர் கடந்த 13ம் தேதி கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் பணியில் இருந்தபோது கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


