News December 19, 2025
தென்காசி: மூட்டை மூட்டையாக புகையிலை கடத்தல்.. கைது

பாவூர்சத்திரம் – மேலப்பாவூா் சாலையில் உதவி ஆய்வாளர் ராஜேஸ் குமாா் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருள்கள், பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், க.சோ்மன் (46), த.சிவன்பாண்டி (43) ஆகியோரை கைது செய்தனா்.
Similar News
News December 19, 2025
தென்காசி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு MRB செவிலியர் மேம்பாட்டு சங்கம் தென்காசி மாவட்டத்தின் சார்பில் MRB செவிலியர் பணி நிரந்தரம் கோரி காத்திருப்பு போராட்டம் (டிச 19) இன்று
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமணையில் மாரீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. சரண்யா, மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சுப்புராஜ் பேசினார். திரளான செவிலியர்கள் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News December 19, 2025
BREAKING தென்காசியில் 1.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தென்காசி மாவட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தென்காசி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் – 13,75,091. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு உள்ள வாக்காளர்கள் – 12,25,297. நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 1,51,902. வாக்காளர் பட்டியல் வெளியீடு போது திமுக அதிமுக பாஜக என அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
News December 19, 2025
தென்காசி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <


