News February 2, 2025
தென்காசி மாவட்ட ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

தென்காசி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தென்காசி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்களை தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, ஆலங்குளம் ஆகிய நான்கு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
கடையநல்லூரில் போட்டியிட நகர்மன்ற தலைவர் விருப்பமனு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் விருப்பமனு அளிப்பதற்காக மார்ச் 6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரஹ்மான், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று விருப்பமனு அளித்தார்.
News March 2, 2026
தென்காசி: நகை திருடிய வழக்கில் 4 பேர் கைது

ஆலங்குளத்தை சேர்ந்த சக்திவேல் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது பீரோவில் இருந்த 110 கிராம் நகை திருடு போனது. இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் இவரது கடைக்கு எதிரே பைக் பழுது கடை வைத்திருக்கும் தினேஷ், மணிகண்டன் உட்பட 4 பேர் நகை திருடியது தெரிந்தது. நேற்று 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News March 2, 2026
தென்காசி: சாலையோரம் ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம்-ஆனைகுளம் செல்லும் சாலையில் நேற்று அடையாளம் தெரியாத சுமார் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையோரம் ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சேர்ந்தமரம் காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி உயிரிழந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


