News January 14, 2026

தென்காசி மாவட்ட போலீசார் இரவு ரவுண்ட் பணி

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன்உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (ஜன 13) இன்று இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 22, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (21-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100  தொடர்பு கொள்ளலாம்.

News January 21, 2026

தென்காசி: மின்வேலி அமைத்து வனவிலங்கு வேட்டை

image

இராயகிரி அம்மன் சன்னதி தெருவில் வசித்து வரும் செல்வக்குமார். திருமலாபுரம் , பகுதியில் கரும்பு விவசாயம் செய்து வரும் இடத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து  திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து, மின்வேலியில் மின்சாரத்தை பாய்ச்சி வனவிலங்குகளை கொல்ல முயன்ற குற்றத்திற்கு (ஜன.20) பிடித்து வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்டு வனஉயிரின வழக்கு பதிவு செய்து 5,50,000 அபராத தொகை விதிக்கப்பட்டது.

News January 21, 2026

தென்காசி: ஊருணியில் மிதந்த சடலம்

image

வாசுதேவநல்லூர் ஊருணியில் மிதந்த முதியவர் சடலத்தை போலீசார் நேற்று மீட்டனர். வாசுதேவநல்லூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊருணியில் ஆண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாரும், தீயணைப்பு நிலையத்தினரும் சென்று சடலத்தை மீட்டனர். இறந்து கிடந்தவர் வாசுதேவநல்லூர் மேல ரத வீதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் இசக்கி(86) எனத் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!