News December 14, 2024

தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட மழையின் அளவு

image

தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்ததை தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று(டிச.13) மட்டும் பெய்த மழையின் அளவை இரண்டரை மணி நேரங்களாக பிரித்து மழை பொழிவின் அளவை குறிப்பிட்டுள்ளார். அதிகபட்சமாக கடனாநதி இராம நதி குண்டாறு நீர்த்தேக்க பகுதிகளில் அதிகமாக மழைப்பொழிவு பெய்துள்ளது என்று ஆட்சியர் அறிக்கை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாலையில் தென்காசி அநேக இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

Similar News

News April 11, 2026

ஆலங்குளத்தில் நடிகர் ராமராஜன் பிரசாரம்

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக விபின் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் ராமராஜன் இன்று தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் நடிகர் ராமராஜன் ரசிகர் மன்றத்தினர் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

News April 11, 2026

தென்காசி: ஆலங்குளத்தில் 226 பேர் மீது வழக்குப்பதிவு

image

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரை சேர்ந்த பனைத்தொழிலாளி மணிகண்டன் மீது SI இசக்கிராஜா துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதை கண்டித்து நாதக வேட்பாளர் பால்ராஜ், MP ராபர்ட் புரூஸ், அதிமுக வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 14 பெண்கள் உட்பட 226 பேர் மீது சட்டவிரோத கூடுகை, சாலை மறியல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 11, 2026

தென்காசி: TVK நிர்வாகி காரில் பணம் பறிமுதல்

image

தமிழகத்தில் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடியில் வாகன சோதனை செய்த போது காரில் வந்த தவெக வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமாரிடம் ஆவணமின்றி இருந்த ரூ.1,37,500 பறிமுதல் செய்யப்பட்டு சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!