News September 12, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று செப்டம்பர் 11ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
Similar News
News September 12, 2025
மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு சிறை

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சார்ந்த ஏழுமலை என்பவர் அவரது மனைவி கலா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி மேற்கொண்ட வழக்கில் தென்காசி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டல் பபிதா ஏழுமலைக்கு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு.
News September 11, 2025
செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கோட்டையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை Iபணியாளர்கள் ஆகஸ்ட் மாதம் ஊதியம் இன்று வரை வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு கண்டன போராட்டம் இன்று நடந்தது.
ஏஐசிசிடியூ தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் காவலர் சங்க மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசி, முருகேஸ்வரி, பகவத், ராஜ ஜோதி, குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News September 11, 2025
தென்காசியில் (செப்.19) தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்.19 காலை 10 முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஷேர்*