News April 19, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 19, 2025

மீன் பாசி குத்தகைக்கு ஏலம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடனா மற்றும் குண்டாறு ஆகிய நீர் தேக்கங்களின் மீன் பாசி ஏலம் அறிவிப்பு நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9788293060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News April 19, 2025

தென்காசியில் வேலை ரெடி

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆக்கவுண்டன்ட்,கேஷியர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ, டிகிரி படித்த 20 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து அடுத்த மாதம் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News April 19, 2025

முதியவரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கைது

image

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே கரிசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 62. இவரை வீடு தேடிச் சென்று நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடினர். குற்றவாளிகள் பாலாஜி, பாலமுருகன், சுபாஷ், சந்தோஷ் ஆகிய நான்கு பேரை அச்சன்புதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!