News August 27, 2025

தென்காசி மாவட்ட காவல்துறையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து இன்று பொதுமக்கள் அனைவருக்கும் “தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்துக்களை காக்கி உடைய அணிந்த விநாயகர் படத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Similar News

News August 27, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

News August 27, 2025

தென்காசி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தென்காசி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 27, 2025

ஆம்பூர் அருகே தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் கரடி

image

தென்காசி மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் தோட்டத்தில் 15 வயது பெண் கரடி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்தி, பிரேத பரிசோதனை செய்து, கரடியை சம்பவ இடத்தில் எரித்தனர். முதற்கட்ட விசாரணையில், பிற கரடியுடனான மோதலில் கரடி இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!