News April 11, 2025
தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்ரல்-10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
புளியங்குடி மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே 42 வயது விவசாயி, தனது 17 வயது மகளை கர்ப்பமாக்கி உள்ளார். மகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படவே, மருத்துவ பரிசோதனையில் 7 மாத கர்ப்பம் தெரியவந்தது. தாய் வெளியே சென்றபோது, மது போதையில் தந்தை தவறாக நடந்ததாக மகள் தெரிவித்தார். இதையடுத்து, தாய் அளித்த புகாரின் பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News July 5, 2025
அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஆண் சிகிச்சை உதவியாளர் மற்றும் பெண் சிகிச்சை உதவியாளர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்களை https://tenkasi.nic.in/notice_category/recruitment/-66 என்ற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
தென்காசியில் சேமிப்பு கிடங்குகள் திறப்பு

ஆலங்குளத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.517.8 இலட்சம் மதிப்பீட்டிலான ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினையும், பாவூர்சத்திரத்தில் ரூ.290 இலட்சம் மதிப்பீட்டிலான சேமிப்புக் கிடங்கினையும், சங்கரன்கோவிலில் ரூ.550 இலட்சம் மதிப்பீட்டிலான மூன்று சேமிப்புக் கிடங்குகளையும், அச்சன்புதூரில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டிலான துணை வேளாண் விரிவாக்க மையத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கபட்டது.