News August 20, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (19-08-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 27, 2025

தென்காசி: ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

image

சுரண்டை பகுதியை சேர்ந்த தொழிலாளி கோ.கனகராஜ் (67). இவர் வியாழக்கிழமை பிற்பகல் சேர்ந்தமரத்தில் இருந்து ஆட்டோவில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சுரண்டையை நோக்கி சென்றுபோது குலையநேரி அருகே எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்ததில் கனகராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுரன்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News September 27, 2025

செங்கோட்டை – ஈரோடு இரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலங்களில் செப்-30ம் தேதி பணிகள் நடைபெற இருப்பதால் செங்கோட்டை – ஈரோடு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 16846) செங்கோட்டையில் இருந்து காலை 5:10 புறப்பட்டு கரூர் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு வரை சேவையானது பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

News September 27, 2025

தென்காசி: கலைஞர் கனவு இல்ல திட்ட ஆணை வழங்கல்

image

சென்னையில் நேற்று புதுமைப் பெண், தமிழ் புதல்வன், திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்த நிகழ்வில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கழுநீர்குளம் பகுதியை சேர்ந்த மாணவி பிரேமா பேசுகையில் தனது வீடு ஒழுகும் நிலையில் உள்ளதாக பேசியதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்ல ஆணையை வழங்குமாறு உத்தரவிட்டார். இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்.

error: Content is protected !!