News March 23, 2024

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் இன்று (23.03.2024) நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டார்.

Similar News

News April 19, 2025

முதியவரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கைது

image

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே கரிசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 62. இவரை வீடு தேடிச் சென்று நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடினர். குற்றவாளிகள் பாலாஜி, பாலமுருகன், சுபாஷ், சந்தோஷ் ஆகிய நான்கு பேரை அச்சன்புதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News April 19, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2025

தென்காசி : கடவுளின் தலைவலியை போக்கும் தைலம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலநாதர் கோயில் சைவ சமய பெரியோர், நாயன்மார்களால் பாடல் பெற்ற பழமை வாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில் மூலவர் குற்றாலநாத சுவாமிக்கு ஏற்படும் தலைபாரத்தை நீக்க ஒவ்வொரு ஆண்டும் 48 மூலிகைகளால் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் காய்ச்சப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தைலம் விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

error: Content is protected !!