News January 2, 2026

தென்காசி மாவட்டத்தில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

தென்காசி: மின்வேலி அமைத்து வனவிலங்கு வேட்டை

image

இராயகிரி அம்மன் சன்னதி தெருவில் வசித்து வரும் செல்வக்குமார். திருமலாபுரம் , பகுதியில் கரும்பு விவசாயம் செய்து வரும் இடத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து  திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து, மின்வேலியில் மின்சாரத்தை பாய்ச்சி வனவிலங்குகளை கொல்ல முயன்ற குற்றத்திற்கு (ஜன.20) பிடித்து வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்டு வனஉயிரின வழக்கு பதிவு செய்து 5,50,000 அபராத தொகை விதிக்கப்பட்டது.

News January 21, 2026

தென்காசி: ஊருணியில் மிதந்த சடலம்

image

வாசுதேவநல்லூர் ஊருணியில் மிதந்த முதியவர் சடலத்தை போலீசார் நேற்று மீட்டனர். வாசுதேவநல்லூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊருணியில் ஆண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாரும், தீயணைப்பு நிலையத்தினரும் சென்று சடலத்தை மீட்டனர். இறந்து கிடந்தவர் வாசுதேவநல்லூர் மேல ரத வீதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் இசக்கி(86) எனத் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 21, 2026

BREAKING: தென்காசியில் சுட்டு பிடிக்க உத்தரவு

image

தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலங்களை காட்டுப் பன்றிகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல குழு அமைக்கபட்டு உள்ளது. விவசாயிகள் தகவல் தெரிவிக்க எண்கள் கொடுக்கபட்டுள்ளது. கடையநல்லூா் – 7806846467, சிவகிரி -9629089469, புளியங்குடி – 9489780210, குற்றாலம் -9788232000, தென்காசி -9842685856, ஆலங்குளம் -9965032841 தொடா்பு கொள்ளலாம். ஷேர்!

error: Content is protected !!