News October 21, 2025
தென்காசி மாவட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் கனமழையால் 14 குடிசைகள் மற்றும் ஆறு ஓட்டு வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது தோட்டக்கலைத் துறையில்05.67 ஹெட் டேர் பயிர்களும் வேளாண்மைத் துறையில் 09.06 ஹெக்டேர் பயிர்களும் கனமழையால் சேதம் அடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது என்று(அக்21 ) இன்று வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்
Similar News
News October 22, 2025
தென்காசி முக்கிய ரயிலுக்கு நாளை முதல் கூடுதல் நிறுத்தம்

தென்காசி வழியாக மதுரையிலிருந்து, குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் எண் (16 327/ மற்றும் 16 328) நாளை அக்டோபர் 22ம் தேதி புதன்கிழமை முதல் பெரியநாடு ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News October 21, 2025
BREAKING: முதல்வரின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு.!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வரும் அக்.24, 25 ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தர இருந்தார். இந்நிலையில், தற்போது சென்னையில் கனமழை பெய்து வருவதால், இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
தென்காசி: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<