News April 5, 2025

தென்காசி மாவட்டத்தில் மின்தடை நீக்கும் சேவை மையம்

image

தென்காசி மாவட்டத்தில் மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP), மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 94458 59032, 94458 59033, 94458 59034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் செல்போன் எண் 94987 94987 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை தொடர்பு கொண்டு புகார் தகவல்களை தெரிவிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 28, 2025

தென்காசி: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

image

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்தோ (அ) தென்காசி மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து தொழிலாளர்கள் நலன் காத்திட உதவுங்கள்.

News September 28, 2025

தென்காசி: மின் கசிவால் தீ பற்றிய வீடு

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கனேரியைச் சேர்ந்த அரவிந்த் (38) என்பவர் வீட்டில், இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது. அரவிந்த், அவரது மனைவி சுபா (34), குழந்தைகள் மற்றும் தந்தை ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல பொருட்கள் சேதமடைந்தன.

News September 28, 2025

தென்காசி: FREE GAS BOOK பண்ணிட்டிங்களா?

image

தென்காசி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!