News September 14, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.14) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
சொக்கநாதன்பட்டி வழியாக மினி பஸ் சேவை – துவக்கி வைத்த MLA

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டி கிராமம் வழியாக பூலாங்குளம் வரை செல்லும் மினி பேருந்து வசதியினை இன்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அஞ்சாங்கட்டளை பஞ்சாயத்து தலைவர் முப்புடாதி பெரியசாமி, கிளைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News September 14, 2025
தென்காசி மக்களே எச்சரிக்கை

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்று தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.
News September 14, 2025
தென்காசி: மூதாட்டி உயிரிழப்பு கீளினிக்கு சீல்

அடைக்கலப்பட்டணத்தில் சிகிச்சைக்காக சென்ற சுப்பம்மாள் (67) உயிரிழந்ததால், மருத்துவர் சரவணகுமாரின் கிளீனிக்குக்கு சீல் வைக்கபட்டது. உறவினர்களின் புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் உத்தரவுப்படி, அனுமதியின்றி இயங்கிய கிளீனிக்கில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நேற்று சீல் வைக்கபட்டது.