News April 25, 2025
தென்காசி மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஆட்கொல்லி தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் 28.04.2025 முதல் 27.05.2025 வரை நடைபெறவுள்ளது. எனவே ஆடுகள் வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித பாகுபாடின்றி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.
Similar News
News April 25, 2025
தென்காசி :மின் தடை தொடர்பான புகார் எண்

தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மழை நேரங்களில் மின்கம்பங்கள், மின்சாதனங்கள் அல்லது மின்சாரம் சம்பந்தமாக தேவைப்படும் அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP)மூலமாகவும், மின்தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.
News April 25, 2025
செங்கோட்டை அருகே முதிய தம்பதிக்கு அரிவாள் வெட்டு

செங்கோட்டையை சோ்ந்தவா் கா.லெட்சுமணன்(70). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் இவரது சகோதரா் கா.குமரப்பெருமாள்(72)க்கும் நடைபாதை தொடா்பாக 20 ஆண்டு பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில் வியாழக்கிழமை லெட்சுமணன் அந்தப் பாதையில் சென்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், குமரப்பெருமாள் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து லெட்சுமணனை வெட்டினாரம். அதைத் தடுக்க வந்த லெட்சுமணன் மனைவிக்கும் வெட்டு விழுந்ததாம்.
News April 24, 2025
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத் தொகை

தென்காசி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டு படுகாயமடைந்த நபர்களுக்கு நிவாரணத்தொகை, காலமான நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.2,00,000 ( Hit and Run Motor Accident Scheme )2022 திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.