News January 29, 2026
தென்காசி: மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவன்

திருவேங்கடம் பகுதியை சேர்ந்த ரகுவரன் (29) சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும், இவரது மனைவி சங்கீதா (26) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சங்கீதாவிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. தப்பியோடிய சங்கிதா அளித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் ரகுவரனை கைது செய்தனர்.
Similar News
News February 6, 2026
தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News February 6, 2026
தென்காசி உள்ளுரில் வேலை வேணுமா? – APPLY NOW…!

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் அளவிலான கூட்டமைப்புகளால் வழங்கப்படும் தகுதியான நபர்கள் மூலம் வெளியாதார வட்டார முறையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம். 06.02.2026 முதல் 16.02.2026 அன்று மாலை 5மணி வரை சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும். ஷேர்.!
News February 6, 2026
தென்காசியில் வாகனம் கவிழ்ந்து விபத்து

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து வீரகேரளம்புதூருக்கு இன்று காலையில் லோடு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இலந்தை குளம் கரையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென அருகே இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


