News September 6, 2025

தென்காசி மக்களுக்கு கோவில் நிர்வாகம் அறிவிப்பு

image

தென்காசி நகராட்சி உட்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலில் ஒரு பணியில் மிகப்பெரிய அளவில் முறையீடுகள் நடந்துள்ளன. எனவே உபயதாரர்கள் தாங்கள் வழங்கிய நன்கொடைகள், பணம், மற்றும் பொருட்கள் குறித்த விபரங்களை 9585090030 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறு ஆலய சொத்து மீட்பு குழு சார்பில் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News September 7, 2025

தென்காசியில் சிறுத்தை நடமாட்டம்

image

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை வடகரை வடகாடு பகுதியில் இருந்து சென்னா பொத்தை செல்லும் பாதையில் சிறுத்தை ஒன்று பாறையில் படுத்து கிடப்பதைக் கண்ட இளைஞர்கள் அலறி அடித்து ஊர் திரும்பி உள்ளனர் மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.

News September 7, 2025

திருமலை கோயில் வரும் பக்தர்கள் கவனத்திற்கு!

image

தென்காசி மாவட்டம், பண்பொழி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயிலில் நாளை சந்திர கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மேல் மலை பாதைக்கு மேல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே நாளை (செப்டம்பர் 7) திருமலை கோயில் வரும் பக்தர்கள் மாலை 5 மணிக்குள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 6, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!