News September 11, 2025

தென்காசி: பொதுப்பணித்துறை கண்டித்து போஸ்டர்

image

தென்காசி,பொய்கை ஊராட்சி கள்ளம்புளி கிராமத்திற்கு கருப்பானதி அணை பாப்பங்கால்வாய் வழியாக 13ம் நம்பர் மடையில் இருந்து கள்ளம்புளி குளம் நிரம்பி உபரி நீர் குலையனேரி குளத்திற்கு சென்று பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது குளத்தின் நடுவே குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் பொதுப்பணி துறையை கண்டித்து ஆதார் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என வால்போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Similar News

News September 11, 2025

தென்காசியில் (செப்.19) தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்.19 காலை 10 முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஷேர்*

News September 11, 2025

தென்காசி: தெருநாய்கள் கடித்ததில் 3 பேர் படுகாயம்

image

கடையநல்லூரில் தெரு நாய்கள் தாக்கியதில் மூவர் படுகாயம் அடைந்தனர். முதுசாமி (75), முருகன் (47) ஆகியோரை நாய்கள் கடித்து குதறின. இதனால் பைரோஸ் பேகம் (60) என்ற பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பைரோஸ் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

News September 11, 2025

தென்காசி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா??

image

தென்காசி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..

error: Content is protected !!