News January 10, 2026
தென்காசி : பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு <
Similar News
News January 30, 2026
தென்காசி: கத்திரிக்கோலால் குத்தி கொண்டு தற்கொலை

வாசுதேவநல்லூர், சிந்தாமணிபேரி புதூரை சேர்ந்த முனீஸ்வரன் (39) தனியார் ஆலையில் தையல் தொழிலாளியாக பணியாற்றினார். இவருக்கு மனநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. முன்பு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தவர் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில், (ஜன.31) மனைவி வெளியூர் சென்றபோது, வீட்டில் இருந்த முனீஸ்வரன் கத்தரிக்கோலால் உடலில் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். வாசுதேவநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 30, 2026
தென்காசி மாவட்டத்திலும் நிலநடுக்கம்!

திருவேங்கடம் என்.ஜி.ஓ.காலனி, மகாதேவர்பட்டி, கலிங்கப் பட்டி, எஸ்.பி.எம்.தெரு, மேலமரத்தோணி பகுதியில் உள்ள மேலூர், கீழூர், சிவகாசியை சுற்றியுள்ள நாரணாபுரம், அனுப் பன்குளம், சித்துராஜபுரம், ரிசர்வ் லைன். தேவர்குளம், நாச்சியார்புரம், திருத்தங்கல் பகுதிகளிலும் நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேபோல் ஸ்ரீவி, ராஜபாளையம், சாத்தூர் பகுதிகளிலும் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டது.
News January 30, 2026
தென்காசி மாவட்ட இரவு நேர காவலர் ரோந்து பணி விபரம்

நேற்று (29.01.2026) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.


